ஐகோர்ட்டில் 10 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 10 புதிய நீதிபதிகள் இன்று பதவி பதவி ஏற்கின்றனர்.
ஐகோர்ட்டில் 10 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், எஸ்.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதீஷ்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 10 மாவட்ட நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதன்படி 10 புதிய நீதிபதிகளும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, சென்னை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்படுகின்றன. அதனால், இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி, யூடியூப் மூலம் பொதுமக்கள் பார்க்கும் விதமான ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த 10 புதிய நீதிபதிகளில், நீதிபதிகள் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன், மனைவி ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com