தேனியில்வாலிபரை கடத்திச் சென்று தாக்குதல்:3 பேருக்கு வலைவீச்சு

தேனியில் வாலிபரை கடத்திச் சென்று தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனியில்வாலிபரை கடத்திச் சென்று தாக்குதல்:3 பேருக்கு வலைவீச்சு
Published on

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேக் அப்துல் மனைவி பல்கீஸ் (வயது 25). இவர் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபனிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், 'எனது கணவர், தேனி புதிய பள்ளிவாசலுக்கு 3 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்தார். அந்த நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது அண்ணன் சித்திக்ராஜாவை (30), அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்த பார்த்திபன் (26) மற்றும் 2 பேர் சேர்ந்து தேனி-மதுரை சாலை ரெயில்வே கேட் அருகில் கடத்திச் சென்று தாக்கினர். சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்'. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க துணை சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து முல்லை நகரை சேர்ந்த பார்த்திபன் உள்பட 3 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com