தேனியில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை

தேனியில் ஆயுத பூஜையையொட்டி அவல், பொரி, பூக்கள், வாழை மரக்கன்று உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
தேனியில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை
Published on

ஆயுதபூஜை

ஆயுதபூஜை பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி தேனி மாவட்டத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகள், இருசக்கர வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள் போன்றவை சுத்தம் செய்யும் பணி இன்று முழுவீச்சில் நடந்தது. மேலும் பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம், பூக்கள், வாழை மரக்கன்று போன்றவை விற்பனை மும்முரமாக இருந்தது.

தேனி நகரின் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருந்தன. ஆயுதபூஜையையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான அலங்கார பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மக்கள் கூட்டம்

இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்துவிட்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், பூசணிக்காய் விற்பனையும் களை கட்டியது. பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிக அளவில் வந்ததால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com