கடமலைக்குண்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு

கடமலைக்குண்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்
கடமலைக்குண்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு
Published on

கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இ்ந்த சாலையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊரக வேலை திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் துரைப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com