கள்ளக்குறிச்சியில் தொழிலாளி திடீர் சாவு

கள்ளக்குறிச்சியில் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியில் தொழிலாளி திடீர் சாவு
Published on: 

கள்ளக்குறிச்சி மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் தேவராயன் மகன் சின்னையன் (வயது 38). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னையனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னையன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com