கருங்குளம், ஸ்ரீவைகுண்டத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கருங்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருங்குளம், ஸ்ரீவைகுண்டத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஸ்ரீவைகுண்டம்:

கருங்குளம் யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தூத்துக்குடி மாவட்டதலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்து காலி பணியிடங்களிலும் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகம் முன்பும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com