கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் - ஒருவர் கைது

மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் - ஒருவர் கைது
Published on

சென்னை,

சென்னை, கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை கற்களை கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஏடிஎம் சம்பவத்தின் முழு விவரம்:-

சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலையில் உள்ள பிரபல தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு நேற்று அதிகாலை 1.20 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வந்து, ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைக்க முயன்றார். இந்த காட்சிகளை ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமைகட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு வங்கி அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரவு ரோந்து பணியில்இருந்த வடபழனி சரக உதவி ஆணையர் பாலமுருகன்,அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கமுடியாததால் கொள்ளையன் அங்கிருந்து தப்பிவிட்டார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் குறித்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com