கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி சீனிவாச நகர் 6-வது தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் பாக்கியராஜ் (வயது 38). தாழிலாளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் லட்சுமி மில் மேம்பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com