கோவில்பட்டி கோவிலில்அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஹோமம்

கோவில்பட்டி கோவிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது.
கோவில்பட்டி கோவிலில்அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஹோமம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் அரசு தேர்வு, மத்திய இடைநிலை கல்விவாரிய தேர்வு, 10,11,12 மற்றும் நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவ -மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது. இதனையொட்டி காலையில் சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஜெபம் வருண ஜெபம், ஹயக்கிரிவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி தீபாரதணை நடைபெற்றது.தொடர்ந்து கோடிசக்தி விநாயகருக்கு, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com