கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 20,559 பேர் எழுதினர்-3,858 பேர் தேர்வு எழுதவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வை 20 ஆயிரத்து 559 பேர் எழுதினார்கள். 3,858 பேர் தேர்வு எழுதவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 20,559 பேர் எழுதினர்-3,858 பேர் தேர்வு எழுதவில்லை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வை 20 ஆயிரத்து 559 பேர் எழுதினார்கள். 3,858 பேர் தேர்வு எழுதவில்லை.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி ஆகிய வருவாய் கோட்டங்களில் 78 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 24 ஆயிரத்து 417 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 20 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுதினார்கள். 3,858 பேர் தேர்வு எழுதவில்லை.

கலெக்டர் ஆய்வு

சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குரூப்-2 தேர்வு மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும் போது, 'குரூப்-2 தேர்வு எழுதியவர்களுக்கு போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளுடன், தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

அப்போது சூளகிரி தாசில்தார் நீலமேகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com