குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா

குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா
Published on

நாகர்கோவில்:

குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம் பொதுமக்களிடம் மருத்துவ பரிசோதனையை அதிகரித்துள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் 257 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது நாகாகோவில் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர், முன்சிறை பகுதியில் 5 பேர், அகஸ்தீஸ்வரம் பகுதியில் 5 பேர், குருந்தன்கோடு பகுதியில் 2 பேர், திருவட்டார் பகுதியில் 4 பேர், தக்கலை பகுதியில் 3 பேர், தோவாளை பகுதியில் 3 பேர், ராஜாக்கமங்கலம் பகுதியில் ஒருவர் என மொத்தம் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 12 பேர், பெண்கள் 16 பேர் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com