கும்பகோணத்தில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கும்பகோணம்:

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறைகள்

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நேற்று கும்பகோணத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

கண்டன கோஷங்கள்

மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கவுரி, மகளிர் அணி தலைவர் ஜெயந்தி, தொண்டரணி தலைவர் கண்ணகி, துணைத் தலைவர்கள் கலா, சசிகலா, மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி நடராஜன், மாநகர பொறுப்பாளர் ஆனந்தி தமிழழகன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com