மொடக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மொடக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மொடக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Published on

விநாயகர் சதுர்த்தியையொட்டி மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட 36 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் 36 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் எடுக்கப்பட்டு மொடக்குறிச்சி நால் ரோடு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 36 விநாயகர் சிலைகளும் எடுக்கப்பட்டு மொடக்குறிச்சி, மானூர், கணபதிபாளையம் நால்ரோடு வழியாக மன்னாதாம்பாளையம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இதில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் விவேக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com