நாகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாகையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
நாகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
Published on

ஒத்திகை நிகழ்ச்சி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மழை வெள்ளம் காலத்தில் மிதக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

கட்டிட விபத்தில் சிக்கியவர்களையும், உயரமான இடங்களில் சிக்கியவர்களையும் எப்படி மீட்க வேண்டும்.

தற்காப்பு உபகரணங்கள்

வெள்ளம், தீ விபத்து போன்ற நேரங்களில் தற்காப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றி நடக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் அவசர காலங்களில் 101, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் சார்பில் பேரிடர் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

செயல் விளக்கம்

மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். இதில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சீனிவாசன், தீயணைப்பு நிலைய அலுவலர் மோகீசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com