

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், நாகர்கோவில் கார்மல் பள்ளி மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவர்களில் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் வந்த பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் திடீரென பள்ளியின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அதில் ஒருவா சாலையில் அமாந்து போராட்டத்தில் ஈடுபட்டா.
இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக போலீசாரு டன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேசினர். கார்மல் பள்ளிக்கு ஏற்கனவே 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கூடுதலாக 100 தடுப்பூசிகளை வரவழைத்து பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு போலீசாருடன் வாக்குவாதம் சய்த பொதுமக்கள் டோக்கன் வாங்கி கொண்டு வரிசைக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் சில தடுப்பூசி மையங்களில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.