நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.20 உயர்வு

தேவை அதிகரித்து உள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் கூறினர்.
நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.20 உயர்வு
Published on

நாமக்கல்,

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 40 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங் கிணைப்புக்குழு தினமும் நிர்ணயம் செய்கிறது. அதன்படி கடந்த 1-ந் தேதி கிலோ ரூ.102 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அது படிப்படியாக உயர்ந்து ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.122 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:-

கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக கடுமையாக இருந்தது. இதனால் கறிக்கோழி உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் வரை குறைந் தது. அதே நேரத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை நீடித்து வருவதால் மீன்கள் போதுமான அளவு கிடைப்பது இல்லை. எனவே கறிக்கோழியின் தேவை அதிகரித்து உள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.122 ஆக நிர்ணயம் செய்யப்பட்டாலும், சில்லரை விலையில் கறிக்கோழி கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com