நாசரேத்தில்ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

நாசரேத்தில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
நாசரேத்தில்ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
Published on

நாசரேத்:

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தென்னை, பனை மரங்கள் ஏறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சரிவர காதுகேட்காதாம். இந்நிலையில் நேற்று காலை 8.45 மணியளவில் நாசரேத் பஜாருக்கு வந்து கொண்டிருந்த போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் ரெயில் நாசரேத் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது. இதை அறியாமல் ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அவர், பரிதாபமாக ரெயிலில் அடிபட்டு அதேஇடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com