நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக மாநகராட்சி பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.

மாவட்டத்தில் நேற்று 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,506 ஆக இருந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,763ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,148 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com