வடக்கு மயிலோடையில் ராயப்பர் ஆலய திருவிழா சப்பரபவனி

வடக்கு மயிலோடையில் ராயப்பர் ஆலய திருவிழா சப்பரபவனி நடந்தது.
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள வடக்கு மயிலோடை கிராமத்தில் புனித ராயப்பர் ஆலய திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு சொற்பொழிவு, ஆராதனை, திருப்பலி, நற்கருணை, ஆராதனை நடைபெற்று வந்தது. 9-ம் திருநாளான நேற்று இரவு ராயப்பர் சப்பரபவனி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து புறப்பட்ட சப்பர பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் உப்பு, மிளகு, மாலைகள் படைத்து வழிபாடு நடத்தினர். நேற்று அதிகாலையில் ஆலயத்தில் கயத்தாறு பங்கு தந்தை எரிக்சன் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com