ஒரே இரவில் 3 கோவில்கள் உண்டியலை உடைத்து திருட்டு

ஆரணியில் ஒரே நாள் இரவில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே இரவில் 3 கோவில்கள் உண்டியலை உடைத்து திருட்டு
Published on

ஆரணி,

ஆரணியில் ஒரே நாள் இரவில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உண்டியல் உடைப்பு

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை நேரம் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் வந்து பார்வையிட்டு ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

ஆரணி- வந்தவாசி நெடுஞ்சாலையில் வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் உள்ள மாரியம்மன், விநாயக கோவில்களிலும் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளனர்.

இந்த கோவில்களும் ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். இதனால் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியவர்கள்தான் இங்கும் திருடியிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

ஆரணி தாலுகா போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆரணி தொகுதிக்குட்பட்ட ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கந்தாங்கள் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அச்சம்பவம் பெரணமல்மலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com