

சென்னை,
தென் சென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதியில் இவர் பதுங்கியிருந்த தகவல் அறிந்து, தனிப்படை போலீசார் இவரை துரத்தி சென்று பிடித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நேற்று ரவுடி சிடி மணியை பிடிக்கச்சென்ற போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காயம் அடைந்துள்ளார். காவல்துறையினர் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிடி மணியும் காயம் அடைந்துள்ளார். சி.டி மணியை கைது செய்துள்ள காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காயமடைந்த அதிகாரி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்,இந்த சம்பம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
" ரவுடி சிடி. மணி மீது கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன. ரவுடி மணியை போலீசார் தேடி சென்றபோது அவர் வீட்டில் இல்லை. தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துறத்தி சென்றனர்.
போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றபோது அவர் தாக்கினார். தற்காத்துக் கொள்வதற்காக ரவுடி மீது போலீசார் சுட்டதில் காயம் அடைந்தார்.
சீ.டி மணி துப்பாகியால் இரண்டு முறை காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளான். இதனால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்து இருக்கிறார். சென்னையில் ரவுடிசம் என்பது கிடையாது " என்று தெரிவித்தார்.