

சென்னை,
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் மாவுக்கார்காடு என்ற இடத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று கிணற்றில் சிக்கிய நபர்களில் 2-வது நபரை காப்பாற்றும்போது, விஷவாயு தாக்கி தீயணைப்பு வீரர் ரா.ராஜ்குமார் வீரமரணம் அடைந்தார். அவரது துணிச்சலான மற்றும் தன்னலமற்ற பணியை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் 2021-ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில்ரூ.10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் ரூ.44.42 லட்சம் தொகை அவரது குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.