பெரியகுளத்தில்கருட வாகனத்தில் கள்ளழகர் வீதி உலா

பெரியகுளத்தில் கருட வாகனத்தில் கள்ளழகர் வீதி உலா வந்தார்.
பெரியகுளத்தில்கருட வாகனத்தில் கள்ளழகர் வீதி உலா
Published on

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா 3 நாட்கள் நடந்தது. இதையொட்டி கடந்த 5-ந்தேதி கோவிலில் இருந்து பெருமாள் கள்ளழகராக பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் மண்டகப்படிதாரர்கள் ஏற்பாடு செய்த 30 இடங்களுக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வழிநெடுக பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் எழுப்பி கள்ளழகரை வழிபட்டனர். பின்னர் வடகரை உழவர் சந்தை எதிரே உள்ள வராகநதியில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் ராம அலங்காரம், கிருஷ்ண அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இந்நிலையில் நேற்று தென்கரை வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கள்ளழகர் உற்சவமூர்த்தி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் தென்கரை மற்றும் வடகரை பகுதியில் வீதி உலா கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மண்டகப்படிதாரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுக பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com