ராமேசுவரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்..!

ராமேசுவரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கி காணப்பட்டது.
ராமேசுவரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்..!
Published on

ராமேசுவரம்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலேர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நேற்று முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ.வரை காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் கடல் வழக்கத்துக்கு மாறாக திடீரென 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. மேலும் பாறை மற்றும் பவளப்பாறைகள், பாசிகள், சிப்பிகள் உள்ளிட்டவைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, இது போன்று காற்று வீசும் சீசனில் துறைமுக கடற்கரை, அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாகவே கடல் நீர் உள்வாங்குவதும், மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதும் நடைபெறுவதுதான் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com