ராயபுரத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.8½ லட்சம் வழிப்பறி

ராயபுரத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.8½ லட்சம் வழிப்பறி செய்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.8½ லட்சம் வழிப்பறி
Published on

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, டி.கே.பி. தெருவைச் சேர்ந்தவர் முகமத் தமீம் (வயது 29). இவர், தன்னுடைய உறவினரான சாதிக் என்பவர் கொடுத்த ரூ.8 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராயபுரம், எம்.எஸ்.கோவில் தெரு அருகே சென்றபோது, 2 மர்ம நபர்கள் முகமத் தமீக்கை வழிமறித்து, கத்தியால் அவரது கையில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த ரூ.8 லட்சத்தை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), கொருக்குப்பேட்டையை சேர்ந்த கருணா (26) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் வங்கியில் டெபாசிட் செய்ய பணம் எடுத்து வந்த முகமத் தமீமை நோட்டமிட்டு, பின் தொடர்ந்து வந்து, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com