செய்யூரில் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது

செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தரின் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது.
செய்யூரில் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தாளராக வேலை செய்து வருபவர் செய்யூர் பாளையர் மடம் பகுதியை சேர்ந்த தியாகு. இவர் தன்னுடைய அண்ணன் வீட்டு மாடியில் குடிசை அமைத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். நேற்று பகல் 12 மணி அளவில் அவருடைய குடிசை மின்கசிவு காரணமாக முழுவதும் எரிந்து சாம்பலானது.

குடிசையில் தியாகு வீடு கட்டுவதற்காக ரூ.15 லட்சம் வைத்திருந்தார். அங்கு இருந்த ரூ.15 லட்சம், 15 பவுன் நகை, வீட்டு மனை ஆவணம், சான்றிதழ்கள், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது.

இது குறித்து தியாகு செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com