மகனின் இன்சூரன்ஸ் பணத்தில் தாய்க்கும் பங்கு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு

பெரியகுளம் அருகே மகனின் இன்சூரன்ஸ் பணத்தில் தாய்க்கும் பங்கு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மகனின் இன்சூரன்ஸ் பணத்தில் தாய்க்கும் பங்கு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு
Published on

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கோகிலவாணி. இவர்களது மகள் மிருணாளினி. கார்த்திக் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 23.5.2021 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார். இந்நிலையில் கார்த்திக்கின் காப்பீட்டு தொகையில் தனக்கும் பங்கு தர வேண்டும் என அவரது தாய் பழனியம்மாள், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் முறையிட்டார். ஆனால் அந்த நிறுவனம் அவரது முறையீட்டை நிராகரித்து விட்டது. இதுகுறித்து பழனியம்மாள் தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தார். இதையடுத்து, அந்த மனுவானது கடந்த மாதம் 26-ந்தேதி அன்று மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில், கார்த்திக்கின் தாய் பழனியம்மாளுக்கு காப்பீட்டு தொகையான ரூ.75 லட்சத்தில் 3-ல் ஒரு பங்கான ரூ.25 லட்சமும், கார்த்திக்கின் மனைவி மற்றும் குழந்தைக்கு ரூ.50 லட்சமும் வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com