தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை மக்கள் விரும்புகின்றனர் திருநாவுக்கரசர் பேட்டி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையே மக்கள் விரும்புகின்றனர் என்று திரு நாவுக்கரசர் கூறினார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை மக்கள் விரும்புகின்றனர் திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை சத்திய மூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு பொறுப்பாளர் ரோட்டாஸ் போசய்யா ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவராக டி.ஏ.நவீன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.எஸ்.காமராஜ், ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவர் துறைமுகம் ரவிராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் அவர்களது பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், மேலும் காலதாமதம் ஆகும். இதைத் தான் அ.தி.மு.க.வும் விரும்புகிறது. ஆனால், மக்கள் அந்த 18 தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலையே விரும்புகின்றனர்.

அவ்வாறு அதிக அளவிலான தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com