"தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்" - அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் விரைவில் நகரம் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
"தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்" - அமைச்சர் செல்லூர் ராஜு
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் இனிவரும் நாட்களில் எடுக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு இல்லை, ஆனால் விவசாயிகளுக்கு பயிர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்றும் சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com