சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரும் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு

சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரும் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு
Published on

திருப்பூர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா. அருகே உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரும் -கவுசல்யாவும் காதலித்து வந்தனர். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது. இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார்.

பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது . இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜ் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யா பெற்றோர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சங்கர் கொலை வழக்கில் குற்றம் சாற்றபட்ட கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com