நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு

நடப்பு நிதியாண்டில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு
Published on

சென்னை,

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2025-26-ம் நிதியாண்டில் 4,300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் (2026-27) 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியபோது, 'ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிதியாண்டில் இலக்கை விரைந்து முடித் திடும் வகையில் தற்போது ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக எல்.எச்.பி. பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பெட்டிகள் தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணிகள் நடைபெ றுகிறது' என்றார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com