மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 261 வழக்குகளுக்கு சமரச தீர்வு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 261 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9½ கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 261 வழக்குகளுக்கு சமரச தீர்வு
Published on

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 261 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் மாதந்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது. ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

261 வழக்குகளுக்கு தீர்வு

கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 740 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முடிவில் 261 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.9 கோடியே 33 லட்சத்து 12 ஆயிரத்து 888 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீட்டு தொகைக்கான ஆணையினை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் வழங்கினார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (கூடுதல் பொறுப்பு) ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com