

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-
முதல் 24 மணி நேரத்திலேயே இணையத்தில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று பதிந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கிராம சபைகள் தோறும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமான அ.தி.மு.க.விற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறட்டும். புதிய விடியலுக்கு உதயசூரியன் உதயமாகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் சர்வதேச கால்பந்து கிளப்பான ஏடி ஆல்க்ரானில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், வறுமை காரணமாக, ஸ்பெயின் சென்று விளையாட முடியாமல் தவித்து வந்த சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் சுந்தரமூர்த்தி, ஸ்பெயின் சென்று விளையாடத் தேவையான முழு செலவையும் தி.மு.க. மருத்துவ அணியின் இணைச்செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் கருணாநிதி அரங்கத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கான காசோலையையும், விசா மற்றும் டிக்கெட், காலணி, ஜெர்ஸி உள்ளிட்டவற்றையும் வழங்கி வாழ்த்து கூறினார். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.