

சென்னை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதற்கட்டமாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் 100 தொடங்கப்படும் . ஜனவரிக்குப் பின் 412 மையங்களும் தொடங்கும். மத்திய அரசு கொண்டு வரும் தேர்வு எதுவாக இருந்தாலும் மாணவர்களை தயார்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு பயிற்சிக்காக ரூ.20 கோடியை முதலமைச்சர் பழனிசாமி வழங்க உள்ளார்.
நீட் தேர்வு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த 2 தனியார் நிறுவனங்களுடன், பள்ளி கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.