புதிதாக தோண்டப்படும் குழியில் பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் இறங்கினார்!

புதிதாக தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப்படை வீரர் உள்ளே இறங்கினார்!
புதிதாக தோண்டப்படும் குழியில் பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் இறங்கினார்!
Published on

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 67 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் இறங்கினார். ஏணி மூலம் இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com