தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com