நாடாளுமன்ற தேர்தலில்"தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்":சீமான் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் “தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில்"தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்":சீமான் பேச்சு
Published on

ஆறுமுகநேரி:

"நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்" என்று சீமான் கூறினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருமணம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்பேது, அவர் கூறியதாவது:-

அரசியல்

அரசியல் என்பது வாழ்வியல், அது இல்லாமல் எதுவும் கிடையாது. இந்த திருமணத்தில் மணமகன், இந்து பெண்ணை திருமணம் செய்துள்ளார். நேற்று வரை மணப்பெண்ணின் பெயர் வேறு, அவருடைய மதம் வேறு, வழிபாடு வேறு. இன்றைக்கு அவர் பெரும்பான்மையில் இருந்து சிறுபான்மை. இவ்வாறு சொன்னால் உங்களுக்கு கோபம் வருதா இல்லையா? எனக்கு கோபம் வரணுமா இல்லையா? அதனால்தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று கூறினேன்.

மதம் மாறக்கூடியது. அவளை தமிழச்சி என்பதை மாற்ற முடியுமா? அவளின் மொழியும், இனமும் தமிழர் என்பதை மாற்ற முடியுமா? பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள்.

மாடியை எதிர்த்து...

அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல்கலாமிற்கு கொடுத்தார்கள். இந்த நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை, சலுகைகள் அல்ல.

என்னை எப்போது நீங்கள் நம்ப போறீங்க என்று தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com