மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 250 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 250 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 250 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கட்சியின் மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், சிறுபான்மை நல உரிமை பிரிவு இணை செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி வேல்முருகன் தலைமையில் மாவட்ட மகளிரணி ஐஸ்வர்யா, தெற்கு மண்டல செயலாளர் சங்கர், தெற்கு மண்டல இளைஞரணி செயலாளர் பகலவன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட 150-க்கும் மேற்பட்டோரும், ரஜினி மக்கள் மன்றத்தின் கன்னியாகுமரி மாவட்ட இணை செயலாளர் எஸ்.வஹாப் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஜோசப் பெலிக்ஸ் ராய், மாவட்ட மீனவரணி செயலாளர் எ.ஆன்றனி, மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் ரவீன் மரிய ஹென்றி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மெர்லின் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களும் என ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுசெயலாளர் ஆ.ராசா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com