மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தி.மு.க.வில் இணைந்தார்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் தி.மு.க.வில் இணைந்தார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தி.மு.க.வில் இணைந்தார்
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜய். இவர் சமீபகாலமாக அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்தார். நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்த டாக்டர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com