

போடி ஒருகால் பாதை பாரதி நகர் பகுதியில் பழைய இரும்பு கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் கடை உரிமையாளர் கடையை திறக்க சென்றார். கடையை திறந்தபோது அங்கு 2 பாம்புகள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்து ஓடினார். பின்னர் அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி கடையில் பதுங்கி இருந்த 2 பாம்புகளையும் பிடித்தனர். அவை சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.