

சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
மோடி பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது சந்தர்ப்பவாதம் . நேரத்திற்கு தகுந்தாற்போல ஆதாயம் தேடி பறக்கும் கொக்கை போன்றது திமுக.
மத்திய அமைச்சர் பதவி குறித்து அனுமானத்திற்கு பதிலளிக்க முடியாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். பதவி கேட்டு நாங்கள் யாரையும் அணுகுவது இல்லை .
எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு. எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான். வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான்.
அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர திமுக நினைப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.