வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்:ஜி.கே.வாசன் பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்:ஜி.கே.வாசன் பேட்டி
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நேற்று த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நாட்டில் செலவு குறையும். அதன் மூலம் வரக்கூடிய பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சியை பெருக்கும். மேலும் நாட்டில் தேர்தல் மீது உள்ள கவனத்தை விட மாநில வளர்ச்சிக்கான நிர்வாக திறமையும் அதிகரிக்கும். இது ஒன்றும் புதிது அல்ல. புதிது போல பேசுகிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இது போலத்தான் ஒரே தேர்தல் இருந்தது. பா.ஜ.க. ஒன்பது ஆண்டு காலமாக நல்லாட்சி செய்து வருகிறது.

அது பற்றி தவறாக ஊழல் புகார்கள் கூறி வருகிறார்கள். தற்போது மக்களுக்கு பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது பா.ஜ.க. ஆட்சி. இதன் மூலம் வல்லரசாக மாற்றக்கூடிய அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது.

9 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் ஒன்று படாமல் தங்களது மாநிலத்தைப் பற்றிய கவலைப்பட்டனர். தற்போது எல்லோருக்கும் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை உருவானதன் காரணமாகத்தான் இந்த கூட்டணி உருவாகி உள்ளது.

எதிர்க்கட்சிகளுடைய கூட்டணி திடீரென பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகின்றனர். மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களை பற்றி மக்களுக்கு தெரியும். ஊழலைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். என்.டி.ஏ. கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வெற்றியை தருவார்கள். எதிர் கட்சிகளின் கூட்டணிக்கு மக்கள் பாடமும் புகட்டுவார்கள், என்றார். பேட்டியின்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பி கதிர்வேலு உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com