

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சரிசெய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, கிங்காலனி, பாத்திமாநகர், அன்னைதெரெசாநகர், முத்துநகர், சண்முகபுரம், சிவந்திநகர், மறவன்விளை, காயல்பட்டணம். அருணாசலபுரம், கொம்புத்துறை, சிங்கித்துறை, காவலர்குடியிருப்பு, கனேசபுரம், அன்புநகர், அங்கமங்களம், சுந்தராஜபுரம், முதலுர், தருமாபுரி. பண்டாரபுரம், தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், தென்திருப்பேரை, அண்ணாநகர், கேம்லாபாத், வடலிவிளை, தோப்பூர், கொட்டங்குளம், சீவலுர், புதுமனை சமத்துவபுரம், வில்லிகுடியிருப்பு, அன்பின்நகரம், ராமநாதபுரம், தோப்பவிளை, மணல்மாதா, புத்தன்தருவை, கடகுளம், அதிசயபுரம் ஆகிய பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.