திருமங்கலத்தில் தீ விபத்தில் 40 மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம்

திருமங்கலத்தில் மின்சார மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
திருமங்கலத்தில் தீ விபத்தில் 40 மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம்
Published on

சென்னை திருமங்கலம், வெல்கம் சாலையில் மின்சார மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது. நேற்று மாலை இந்த விற்பனை நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி அங்கு நிறுத்தி இருந்த மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஜெ.ஜெ. நகர் மற்றும் வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் விற்பனைக்கும், பழுது பார்க்கவும் வைத்து இருந்த 40-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com