திருத்தணியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்தணியில் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

திருத்தணி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சார்பில் வைக்கப்பட்ட அம்பேத்கர் புகைப்படம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றப்பட்டதை கண்டித்தும், அத்திமஞ்சேரி பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று ஊர்வலம் செல்லும் போது இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சமூகத்தினர் மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி திருத்தணியில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பாலசிங்கம், புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மணவூர் மகா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மைக்கேல் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் திருத்தணி கோர்ட்டில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றக்கூடாது, அத்திமஞ்சரிப்பேட்டையில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com