திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியைஎஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியை எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியைஎஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூரிலுள்ள தனியார் மஹாலில் உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பாக 13-வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், திருச்செந்தூர் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, திருச்செந்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர.எம்.கே.எஸ்.சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கம் தலைவர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார். தொடர்ந்து போட்டிகள் 2 நாட்கள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com