திருச்சியில், தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில், தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

திருச்சி,

திருச்சியில், தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடத்திய அதிகாரிகள், விசாரணைக்காக சாமிநாதன் குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. பிரபல பைனான்சியரான மணப்பாறை சாமிநாதன், லட்சுமி காபித்தூள் ஏஜென்சியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com