தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மூடப்படும் 16 டாஸ்மாக் கடைகள் விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மூடப்படும் 16 டாஸ்மாக் கடைகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மூடப்படும் 16 டாஸ்மாக் கடைகள் விபரம்
Published on

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் கடைகளில் 16 டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன.

அதன்படி தூத்துக்குடி பொன்னகரம், வட்டக்கோவில், அண்ணாநகர் மெயின் ரோடு, பிரையண்ட்நகர், திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, டபிள்யூ.ஜி.சி. ரோடு, புதிய பஸ் நிலையம், பாலவிநாயகர் கோவில் தெரு, தூத்துக்குடி கல்லூரிநகர், கயத்தார் கடம்பூர் ரோடு, தெற்கு சுப்பிரமணியபுரம், கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி பால்பாண்டி பேட்டை தெரு, கோவில்பட்டி புது ரோடு, உடன்குடி செட்டிகுளம் மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com