தூத்துக்குடியில் சூதாடிய 5 பேர் கைது

தூத்துக்குடியில் சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சூதாடிய 5 பேர் கைது
Published on

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி சங்கர் காலனியில், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 35), மாரியப்பன் (49), திரு.வி.க நகரை சேர்ந்த தங்கமாரி (42), மகாலிங்கம் (37), தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த கண்ணன் (43) ஆகிய 5 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தார்களாம். உடனடியாக போலீசார் 5 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com