

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, மரக்கன்று நடும் விழா, உலக கைகழுவும் தினம் விழா நடந்தது. விழாவுக்கு ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியை தேவி வரவேற்று பேசினார். சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் காமாட்சி முருகன் மரக்கன்றுகளை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் மரக்கன்றுகளை நட்டார். ஆசிரியர் எழிலன் சிறப்புரையாற்றினார். நெடுஞ்சாலைத்துறை செல்வராஜ் அப்துல் கலாம் பிறந்தநாள் கவிதையை வாசித்தார். விழாவில் சுகாதார அலுவலர் பாலகுருசாமி கை கழுவுவது எப்படி என்று குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பத்மநாபன், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.